பூர்வீகக் குடிகளின் ஆட்சிக்காலத்தில் எவருக்கும் அடங்காத ஒரு நிலப்பரப்பாக விளங்கியதனால் அடங்காப்பற்று என அழைக்கப்பட்டது. இந்தியாவில் இருந்து வந்த வன்னியர்களின் ஆக்கிரமிப்பின் பின்னர் யாழ்ப்பாண ஆட்சிக்கும் சிங்கள ஆட்சிக்கும் உட்படாமல் ஒருதனி நிலமாக திகழ்ந்ததினால் அடங்காப்பற்றாகவே இருந்தது.
1505ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கையில் அன்னியர் ஆதிக்கம், போர்த்துக்கேயர் மன்னார், செட்டிக்குளம் ஆகிய பிரதேசங்களை ஆக்கிரமித்த பின்னர் அடங்காப்பற்றின் எஞ்சிய பிரிவை வன்னியர் ஆட்சி செய்ததால் அப்பிரதேசத்தை “வன்னிஸ்” என்று அழைத்தனர். ஒல்லாந்தர் ஆங்கிலேயர் ஆகியவரும் அவ்வாறே அழைத்தனர். 1811 இல் கடைசி வன்னியனான பண்டார வன்னியனின் மறைவு வரை ‘வன்னிஸ்’ என்றே இப்பிரதேசம் அழைக்கப்படலாயிற்று. 1796-1947 வரை இடம்பெற்ற ஆங்கிலேயர் ஆட்சியில் வடமாகாணத்தின் ஒரு பிரிவு வன்னி என்று குறிக்கப்பட்டது.
1505ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கையில் அன்னியர் ஆதிக்கம், போர்த்துக்கேயர் மன்னார், செட்டிக்குளம் ஆகிய பிரதேசங்களை ஆக்கிரமித்த பின்னர் அடங்காப்பற்றின் எஞ்சிய பிரிவை வன்னியர் ஆட்சி செய்ததால் அப்பிரதேசத்தை “வன்னிஸ்” என்று அழைத்தனர். ஒல்லாந்தர் ஆங்கிலேயர் ஆகியவரும் அவ்வாறே அழைத்தனர். 1811 இல் கடைசி வன்னியனான பண்டார வன்னியனின் மறைவு வரை ‘வன்னிஸ்’ என்றே இப்பிரதேசம் அழைக்கப்படலாயிற்று. 1796-1947 வரை இடம்பெற்ற ஆங்கிலேயர் ஆட்சியில் வடமாகாணத்தின் ஒரு பிரிவு வன்னி என்று குறிக்கப்பட்டது.
1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் வன்னி ஒரு தனி மாவட்டமாகவே ஆக்கப்பட்டது.
வன்னியின் பாராள மன்ற உறுப்பினராக இருந்த திரு.சி.சுந்தரலிங்கம் அவர்கள் அடங்காப்பற்றின் பெருமையை எடுத்துக் கூறி இப்பிரதேசம் அடங்காப்பற்று ஆக விளங்க வேண்டுமென பாடுபட்டார். பல அபிவிருத்திகளையும் மேற்கொண்டார்.
1892ஆம் ஆண்டின் பின்னர் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட தமிழர் தாயக கோட்பாட்டு இயக்கத்தின் செயற்பாடுகள் தமிழர் வாழும் வடக்கு கிழக்கு பிரதேசங்கள் அனைத்திற்கும் வியாபித்தன.
1983 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள இனக்கலவரம் வெடித்தது. இதன் பின்னர் இலங்கை அரசுக்கும் தமிழர் தாயகக் கோட்பாட்டு இயக்கத்திற்கும் இடையில் ஆயுதப்போராட்டம் ஆரம்பித்தது.
1987 ஆம் ஆண்டு கொழும்பரசின் வேண்டுகோளுக்கிணங்க இந்திய அரசு “அமைதிப் படை” என்ற பெயரில் படைகளை அனுப்பி இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதியில் தமிழர் வாழும் பிரதேசங்களை ஆக்கிரமித்தது.
1987 ஆம் ஆண்டு அமைதிப்படை என்ற பெயரில் வந்த இந்தியப் படையினர் தமிழர் தாயகக் கோட்பாட்டு இயக்கத்தினை அடிபணியச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் முறுகல் நிலை ஏற்பட்டது.
1987 இல் தமிழர் தாயகக் கோட்பாட்டு இயக்கம் தடைசெய்யப்பட்ட காரணத்தால் அதன் ஆயுதப்போராட்டப் பிரிவு தனது தலமையகத்தினை வன்னியின் முல்லைத்தீவுப்பிரதேசத்திற்கு மாற்றியது.
1987 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் முல்லைத்தீவு வன்னிப் பிரதேசங்களில் தமிழர் தாயகக் கோட்பாடு இயக்க ஆயுதப் பிரிவினரை சல்லடை போட்டுத் தேடிய இந்தியப் படையினர் பெரும் தோல்வியை சந்தித்தனர்.
1989 இல் கொழும்பு அரசியல் தலைமைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக அமைதிப் படைகள் என்ற பெயரில் வந்த இந்தியப் படைகள் வாபஸ் பெறப்பட்டன.
தமிழர் தாயக கோட்பாட்டு இயக்க ஆயுதப் பிரிவினர் வன்னியில் தங்கியிருந்தனர். இதனால் இப்பிரதேசம் “வன்னிப் பெருநிலப்பரப்பு” என மாறியது.
1990 இல் வன்னியூடாகச் செல்லும் யாழ்ப்பாணம்-கண்டி
ஏ-9 நெடுஞ்சாலை மூடப்பட்டது.
யாழ்ப்பாணத்திற்கும் கொழும்பிற்குமான போக்குவரத்துக்கள் கடல் மார்க்கமாகவும் ஆகாய மார்க்கமாக மட்டுமே நடைபெற்றன.
1990 ஆம் ஆண்டு தொடக்கம் போக்குவரத்துக்கள் துண்டிக்கப்பட்டதனால் வன்னி மீண்டும் இலங்கை ஆட்சிக்குட்படாத அடங்காப்பற்றாக மாறியது.
2000 ஆம் ஆண்டு வன்னியின் வட எல்லையில் இருந்த ஆனையிறவுக் கோட்டையை அடங்காப்பற்றிலிருந்த தமிழர் தாயகக் கோட்பாட்டு இயக்கம் தரைமட்டமாக்கி தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது.
தமிழர் தாயகக் கோட்பாட்டின் ஆயுதப் பிரிவினர் எந்த நேரமும் அடங்காப் பற்றிலிருந்து வந்து யாழ்ப்பாணத்தை தாக்கக் கூடும் என இரங்கையரசு கருதியதால் ஆனையிறவிற்கு அப்பால் முகமாலையில் பாரிய இராணுவ முகாம் ஒன்று அமைக்கப்பட்டது. இது வரலாறு திரும்பியுள்ளதை நினைவூட்டுகிறது.
2002 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் கொழும்பில் அரசியல் தலமைகளின் மாற்றங்கள் ஏற்பட்டன.
நோர்வே நாட்டு அரசின் சமாதான முன்னெடுப்பு முயற்சியின் காரணமாக இலங்கை அரசிற்கும் தமிழர் தாயக கோட்பாட்டு இயக்கத்திற்கும் இடையே சமாதானத்தினை நோக்கிய ஓர் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
2002ஆம் ஆண்டு பெப்ருவரி மாதம் வன்னியூடாக செல்லும் யாழ்ப்பாணம்- கண்டி ஏ-9 நெடுஞ்சாலை போக்குவரத்திற்கு திறக்கப்பட்டது.
அந்நியர் ஆட்சி தொடங்கிய காலம் வரை எந்த ஆட்சிக்கும் உட்படாமல் இப்பிரதேசம் அடங்காப் பற்றாக இருந்ததது. பின்னர் ஏனைய மாவட்டங்களைப் போன்று போக்குவரத்துடன் கூடிய பிரதேசமாக மாறியிருந்தது. போக்குவரத்துக்கள் துண்டிக்கப்பட்ட பின்னர் இதுவொரு பெருநிலப்பரப்பாக(அடங்காப் பற்றாக) இருந்தது. மேற்குறிப்பிட்ட ஒப்பந்தத்தின் பெறுபேறாக தொடர்புகள் ஏற்படுத்தப்பட்ட பின்னர் மீண்டும் “வன்னி” என்ற வட்டத்துள் வந்தது.
ஒரே பார்வையில்
அடங்காப்பற்று வன்னிவன்னி என்ற பெயர்வன்னி நாட்டின் தொல்லியல்கோயில்கள்-குளங்கள் வரலாறுஅடங்காப்பற்று ஆட்சியாளர்கள்18 ஆம் நூற்றாண்டில் ஆட்சியாளர்கள்முல்லைத்தீவில் பண்டார வன்னியன்பனங்காமம்பனங்காமத்தில் பண்டார வன்னியன்19 ஆம் நூற்றாண்டில் வன்னிஆங்கிலேயர் ஆட்சிமுல்லைத்தீவு மாவட்டம் கற்சிலை மடு
நன்றி – தகவல் மூலம் – அருணா செல்லத்துரை- ஆசிரியர்- இவர் இப்புத்தகத்தை 2002 ம் ஆண்டில் எழுதி வெளியிட்டுள்ளார். இது மட்டுமல்லாமல் பல வானொல் நாடகங்கள், வரலாற்று ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார்.
http://www.ourjaffna.comthanks