மன்னார்

மன்னார் இலங்கையின் வடமாகாணத்தில் உள்ள ஒரு நகரமும், மன்னார் மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். இதன் எல்லைகளாக கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, அனுராதபுரம், புத்தளம் ஆகியன அமைந்துள்ளன

சுற்றுலாப் பிரதேசங்கள்
மன்னார் நகரப் பகுதியில் நகரத்தில் உள்நுளைகையில் அல்லது வெளியேறும் இடத்தில் பாலத்திற்கு அருகில் மூர்வீதியில் ஏறத்தாழ 1 கிலோமீட்டர் தொலைவில் சித்திவிநாயகர் கல்லூரிக்கு சற்றே அப்பால் பெருக்க மரம் ஒன்றுள்ளது. இது பருமனில் பெருத்தவண்ணமுள்ளது. இதை அருகில் உள்ள தேவாலயம் ஒன்று பராமரித்து வருகின்றது. இதைவிடத் தேவரத்தில் இடம்பெற்ற திருக்கேதீஸ்வரத்தையும் யாத்திரீகள் வந்துபோகின்றனர். அங்கே யாத்திரீகர் மடங்கள் பல உள்ளன.

போக்குவரத்து
தலை மன்னாரில் இருந்து மன்னார் மற்றும் மதவாச்சி வழியாக தொடருந்துப் போக்குவரத்து கொழும்பு வரை உள்ளது. ஆனாலும் மதவாச்சி வரையிலுமான பாதைகள் யாவும் போர் காரணமாகச் சேமடைந்துள்ளமையால் மன்னார் மாவட்டத்தில் புகையிரத சேவைகள் எதுவும் தற்போது இல்லை.


பேருந்துச் சேவைகள்

கொழும்பிற்கு மன்னாரிலிருந்தும் வவுனியா ஊடாகவோ அல்லது நேரடியாக மதவாச்சியூடாகவோ பயணிக்கலாம்.
மன்னார் - கொழும்பு (மதவாச்சி வழியாக)
மன்னார் - வவுனியா

மன்னாரிலுள்ள பாடசாலைகள்

மன்னார் சித்திவிநாயகர் பாடசாலை
மன்னார் சேவியர் ஆண்கள் பாடசாலை
மன்னார் சேவியர் பெண்கள் பாடசாலை
மன்னார் புனித ஆன் மத்திய மகா வித்தியாலயம், வங்காலை
வங்காலை மத்திய மகா வித்தியாலயம்
இலுப்பைக்கடவை அ.த.க .பாடசாலை
கள்ளியடி அ.த.க .பாடசாலை

குறியீடுகள்

- அஞ்சல் - 41000
- தொலைபேசி - +023, 060223
- வாகனம் - NP