முல்லைத்தீவு

முல்லைத்தீவு இலங்கையின் வடகீழ்க் கரையில், வடமாகாணத்தில் அமைந்துள்ளது. இதன் எல்லைகளாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, திருகோணமலை விளங்குகின்றன
இங்கே தண்ணீரூற்றுப் பகுதியில் நிலத்தினூடகத் தண்ணீர் ஊற்றெடுத்துப் பாய்வது காணுவதற்கரிய காட்சியாகும்.

முல்லைத்தீவு மாவட்டம் இலங்கையின் வட மாகாணத்தின் 5 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் முல்லைத்தீவு நகரமாகும். இது தேர்தல் நோக்கங்களுக்காக வன்னி தேர்தல் மாவட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இலங்கை பாராளுமன்றத்தில் 1 ஆசனத்தைக் கொண்டுள்ளது. நிர்வாகத்துக்காக 4 வட்டச்செயளாலர் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

இம்மாவட்டத்தில் தமிழ், முஸ்லிம் சமூகத்தினர் வாழ்ந்து வருகின்றனர். மிகப் பெரும்பான்மையாகத் தமிழர்களும் சிறு அளவில் முஸ்லிம்களும் உள்ளனர். தமிழர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்கள். 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதி சுனாமிப் பேரழிவால் முல்லைத்தீவு நகரம் மிகவும் பாதிக்கப் பட்டது

நிர்வாகம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் 5 உதவி அரசாங்க அதிபர் பணிமனைகளூடாக நிர்வாகிக்கப்படுகின்றது அவையாவன.
கரைதுறைப்பற்று
புதுக்குடியிருப்பு
ஒட்டிசுட்டான்
துணுக்காய்
பாண்டியன் குளம்

வழிபாடுகள்

இந்து ஆலயங்கள்

ஒட்டிசுட்டான் தான்தோன்றீஸ்வரம்
வற்றாப்பளை அம்மன் கோயில்
புளியம்பொக்கணை அம்மன் கோவில்
புதூர் நாகதம்பிரான் கோயில்
முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயம்
முள்ளியவளை கல்யாண வேலவர் ஆலயம்
ஊற்றங்கரை சித்தி விநாயகர் ஆலயம்
குமாரபுரம் சித்திர வேலாயுதர் ஆலயம்
கணுக்கேணி கற்பக விநாயகர் ஆலயம்
குமுழமுனை கொட்டுகிணத்தடிப் பிள்ளையார் ஆலயம்
சிவபுரம் சிவபுரநாதர் ஆலயம்
பனங்காமம் சிவன் கோவில்
வன்னிவிளாங்குளம் அம்மன் கோவில்
kalliruppu kannakaiamman kovil
Moondumurippu kannakaiamman kovil

கிறீஸ்தவ ஆலயங்கள்

முள்ளியவளை புனித திரேசாள் ஆலயம்
மாமூலை அந்தோணியார் ஆலயம்
புதுக்குடியிருப்பு குழந்தை இயேசு ஆலயம்