வவுனியா

வவுனியா இலங்கையின் வடமாகாணத்தில் உள்ள ஒரு நகரமாகும். வவுனியா மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். இதன் எல்லைகளாக மன்னார், முல்லைத்தீவு, அனுராதபுரம், திருகோணமலை ஆகிய மாவட்டங்கள் அமைந்துள்ளன. இலங்கையில் இரு தசாப்தங்களிற்கும் மேலாக நடந்த உள்நாட்டுப் போரினால் மக்கள் இடம் பெயர்ந்து இப்பகுதியில் குடியேறினார்கள்.இலங்கையின் வடக்குக் கிழக்கு மாகாணத்ததில் மிகவும் வளர்சியுடைய நகரமாக அமைந்துள்ளது

கல்வி

பல்கலைக்கழகம்

யாழ் பல்கலைக் கழகத்தின் வவுனியா வளாகம் வவுனியா நகரப் பகுதியில் அமைந்துள்ளது. இவ் வளாகத்திற்காக ஒரு தொகுதி நிலப்பரப்பானது A30 வவுனியா மன்னார் வீதியில், வவுனியா நகரத்திலிருந்து 8 கிமீ தொலைவிலுள்ள பம்பைமடுப் பகுதியில் ஒதுக்கப்பட்டு விடுதிகளிற்கான ஆரம்பவேலைகள் தொடங்கியுள்ளபோதிலும் உள்நாட்டுப் போர் காரணமாக இதன் கட்டட வேலைகள் முடிவடையவில்லை.
இதை விட வவுனியா குருமன்காட்டில் விஞ்ஞான பீடமும், மற்றும் புகையிரத நிலைய வீதியூடாகச் செல்லும் உள்வட்ட வீதியில் முகாமைத்துவக் கற்கைகளும் பார்க் வீதியில் யாழ் பல்கலைக் கழகத்தின் ஆங்கில பீடமும் அமைந்துள்ளது.

பாடசாலைகள்

வவுனியா இலங்கைத் திருச்சபை தமிழ்க் கலவன் பாடசாலை( 1878 இல் அமைக்கப்பட்டது வவுனியாவின் முதல் பாடசாலை) (http://vcctmsopu.synthasite.com/)
வவுனியா மகாவித்தியாலயம்
இறம்மைக்குளம் மகளிர் கல்லூரி
வவுனியா பெரியகோமரசன்குளம் மகாவித்தியாலயம்
[வவுனியா தரணிக்குளம் கணேஸ் வித்தியாலயம்]
வவுனியா விபுலாநந்தா கல்லூரி
சைவப்பிரகாச வித்தியாலயம்
வவுனியா இந்துக் கல்லூரி
வவுனியா பூந்தோட்டம் தமிழ் மகாவித்தியாலயம்
ஓமந்தை மத்திய கல்லூரி
வவுனியா சர்வதேசப் பாடசாலை

தொழில் நுட்பக் கல்லூரி

வவுனியா தொழில் நுட்பக் கல்லூரி வவுனியா மன்னார் வீதியில் ஏறத்தாழ 5 கிமீ தொலைவில் அமைந்துள்ளது
இதை விட வவுனியா பூந்தோட்டத்தில் தேசிய கல்வியியல் கல்லூரி அமைந்துள்ளது.


தொலைத் தொடர்பு

அஞ்சல்
வவுனியாவில் அரச அஞ்சல் அலுவலகம் தவிர முகவர் (Agency) அஞ்சல் நிலையங்களும் அமைந்துள்ளன.
அஞ்சற் குறியீடு: 43000
தொலைபேசிகுறியீடு: 024 (வேறு மாவட்டங்களில் இருந்தும் நகர்பேசியூடாகத் தொடர்பு கொள்ள).
ஆரம்பிக்கும் இலக்கங்கள்
024-2 வவுனியா இலங்கைத் தொலைத் தொடர்பு நிலையம்,
024-3 சீடிஎம்ஏ தொலைபேசிகள்.
024-4 வவுனியா சண்ரெல்
024-5 வவுனியா லங்காபெல்

கம்பி இணைப்புக்கள்
இலங்கைத் தொலைத்தொடர்பு நிறுவனம்
கம்பியற்ற இணைப்பு (நகர்பேசி)
CDMA இணைப்புக்கள்
சண்ரெல்
இலங்கைத் தொலைத் தொடர்புநிறுவனம்
லங்காபெல்
TDMA (GSM) இணைப்புக்கள்
மோபிற்றல், இலங்கைத் தொலைத் தொடர்புநிறுவனம்
டயலொக்
ஹட்ச்

இணைய இணைப்பு
அக்டோபர் 2007 முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கைத் தொலைத் தொடர்பு நிலைய இலக்கங்களுக்கு அகலப்பட்டை இணைப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து டயொக் வைமாக்ஸ், மொபிட்டல் மற்றும் டயலொக் நிறுவ்னத்தில் ஹெசெஸ்டீபிஏ (HSDPA) இணைப்புக்களும் கிடைக்கின்றன.

வானொலிகள்
இலங்கை வானொலி வன்னிச்சேவை
பண்பலை நாதம்
வன்னியின் குரல் (வர்த்தக விளம்பரசேவை)

பத்திரிகைகள்/சஞ்சிகைகள்
நிலம் - கவி இதழ்
தேடல் - இளையோர் தொடர்புசாதனப்பிரிவினது
பூங்கனி - மாதமொருமுறை

மத வழிபாட்டுத் தலங்கள்

வவுனியாவில் நான்கு மதங்களுக்குமான வழிபாட்டுத் தலங்கள் உள்ளன.

இந்து மதம்

சித்திவிநாயகர் ஆலயம்-குடியிருப்பு
அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேசுரர் திருக்கோவில்-கோவில்குளம்
ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலயம் - பூந்தோட்டம்
அருள்மிகு சிறிதேவி பூதேவி மகாவிஷ்ணு தேவஸ்தானம்
காளிகோயில்-குருமன்காடு
ஸ்ரீ கந்தசாமி கோயில்
சிந்தாமணிப் பிள்ளையார் கோயில்
பழனி மலை முருகன் கோயில்-சிதம்பரபுரம்
ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயம்-வெளிக்குளம்
சமளன்குளம் கல்லுமலை பிள்ளையார் கோவில்
ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேவஸ்தானம்- சமளன்குளம்
ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேவஸ்தானம்- தெற்கிலுப்பைக்குளம்
ஸ்ரீ நரசிம்மர் ஆலயம்-தெற்கிலுப்பைக்குளம்
ஐயப்பன் தேவஸ்தானம்-கோவில்குளம்.

கிறீஸ்தவ மதம்

கல்வாரி (இயேசு பகவானின் அவதாரங்களை உள்ளடக்கிய சிற்பங்கள் உள்ளது)
புனித அந்தோனியார் தேவாலயம்-இறம்பைக்குளம்
புனித செபஸ்ரியார் தேவாலயம்-தெற்கிலுப்பை
குருசாண்டவர் தேவாலயம்- தச்சன்குளம்

போக்குவரத்து

வவுனியா தொடருந்து நிலையத்திலிருந்தும் வவுனியாவிற்குமான சேவைகள் இடம் பெறுகின்றன. புகையிரதப் பயணச் சீட்டுக்களை வவுனியா புகையிரத நிலையத்தில் 7 நாட்கள் முன்னையதாகவே காலை 7 மணிமுதல் காலை 9 மணிவரை செய்துகொள்ளவியலும்.
கொழும்பு - வவுனியா(யாழ்தேவி கடுகதிப் புகையிரதம்) கொழும்பிலிருந்து 5.45
மாத்தறை - வவுனியா (ரஜரட்ட ரெஜின) - கொழும்பிலிருந்து மாலை 1:45
கொழும்பு - வவுனியா (கடுகதி) - கொழும்பிலிருந்து மாலை 4:20
கொழும்பு - வவுனியா தபாற் புகையிரதம் கொழும்பிலிருந்து இரவு 10:00
வவுனியா - மாத்தறை (ரஜரட்ட ரெஜின)வவுனியாவில் இருந்து - காலை 3:30
வவுனியா - கொழும்பு (கடுகதி) வவுனியாவில் இருந்து - காலை 5.45
வவுனியாவில் இருந்து கொழும்பு (யாழ்தேவி) கடுகதிப் புகையிரதம் மாலை 3:30
வவுனியாவில் இருந்து கொழும்பு தபாற் புகையிரதம் இரவு 10.00

பேருந்து

வவுனியாவிலிருத்தும் வவுனியாவிற்கும் தனியார் மற்றும் அரசாங்க பேருந்து சேவைகள் இடம் பெறுகின்றன.வவுனியாவிலிருந்து கொழும்பிற்கோ அல்லது யாழ்ற்கோ அல்லது கொழும்பிலிருந்து வவுனியாவிற்கோ இரவில் பயணம் செல்லும்
வவுனியா - மன்னார்
வவுனியா - திருகோணமலை
வவுனியா - மட்டக்களப்பு
வவுனியா - அனுராதபுரம்
வவுனியா - யாழ்
வவுனியா - கொழும்பு (குருநாகல் மற்றும் புத்தளம் ஊடாக இருவேறு வழிகள்)