கிளிநொச்சி

கிளிநொச்சி (Kilinochchi) இலங்கையின் வடமாகாணத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். யாழ்ப்பாணத்தில் இருந்து ஏ9 வீதியில் தெற்காக 68 கிலோமீட்டர் தூரத்திலும் வவுனியாவிலிருந்து வடக்காக 75 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது. இது வட மாகாண சபையின் நிர்வாக தலைமையிடமாக உள்ளது. 2009ம் ஆண்டு வரை தமிழீழ விடுதலை புலிகளின் நிர்வாகத் தலைநகரமாக காணப்ப்பட்டது.
இம்மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் வேளாண்மையைத் தொழிலாகக் கொண்டுள்ளனர். வேளாண்மைக்கான நீர் இரணைமடுக் குளத்தில் இருந்தும் விசுவமடுக் குளத்தில் இருந்தும் பெறப்படுகின்றது. வேளாண்மை ஆய்வுகளுக்கான இலங்கை அரச விவசாய ஆராய்ச்சி நிலையம் 155ஆம் கட்டையிலும் விவசாய விரிவாக்கச் செயற்பாடுகளிற்காக வட மாகாண விவசாய திணைக்களம் அரச அதிபர் விடுதிக்கு அண்மையிலும் அமைந்துள்ளது

கிளிநொச்சியிலுள்ள குளங்கள்

இரணைமடுக் குளம்
அக்கராயன் குளம்
வன்னேரிக் குளம்
கரியாலைநாகபடுவான் குளம்
கனகாம்பிகைக் குளம்
கல்மடுக் குளம்
புதுமுறிப்புக் குளம்

கிளிநொச்சியில் உள்ள பாடசாலைகள்

இலங்கையின் வட மாகாணத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள பாடசாலைகள், மற்றும் கல்வி நிறுவனங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன:
கிளிநொச்சி மத்திய கல்லூரி.
கிளிநொச்சி மகா வித்தியாலயம்.
வட்டக்கச்சி மகா வித்தியாலயம்.
இராமநாதபுரம் மகா வித்தியாலயம்.
இராமநாதபுரம் மேற்கு அ.த.க.பாடசாலை, கிளிநொச்சி.
உருத்திரபுரம் மகா வித்தியாலயம்.
முருகானந்தா மகா வித்தியாலயம்.
புனித தெரேசா பெண்கள் கல்லூரி.
கிளிநொச்சி இந்துக்கல்லூரி.
வட்டக்கச்சி தெற்கு அ.த.க.பாடசாலை.
இராமநாதபுரம் கிழக்கு அ.த.க.பாடசாலை.
அழகாபுரி மகா வித்தியாலயம்.
அக்கராயன்குளம் மகா வித்தியாலயம்.
பன்னங்கண்டி அ.த.க.பாடசாலை.
கோணாவில் அ.த.க.பாடசாலை.
தருமபுரம் மகா வித்தியாலயம்.
பெரியகுளம் அ.த.க.பாடசாலை.
ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயம், புளியம்பொக்கணை.
கனகபுரம் மகா வித்தியாலயம்.
புனித பாத்திமா (றோ.க.) பாடசாலை.
திருவையாறு மகா வித்தியாலயம்.
கனகாம்பிகைகுளம் அ.த.க.பாடசாலை.
முழங்காவில் மகா வித்தியாலயம்